தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘தலைவி’ திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இரு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கதையை, பாகுபலி, மணிகர்னிகா ஆகிய திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜேந்திர பிரசாத் எழுதுகிறார். ஜீ.வி.பிரகாஸ் இசையமைக்கிறார்.
ஜூன்-26 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘தலைவி’ படத்தின் புதிய புகைப்படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா வேடத்தில் நடிகை பூர்ணா!
ஜெயலலிதாவின் தோழி சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை பிரியாமணி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரது திகதிகள் பெறமுடியாது போயுள்ளது. இதையடுத்து நடிகை பூர்ணா வை சசிகலா வேடத்தில் நடிக்க வைக்க முடிவுசெய்துள்ளனர்.
ஜானகி வேடத்தில் நடிகை மதுபாலா!
எம்.ஜி.ஆர்.இன் மனைவி ஜானகி அம்மாவின் கதாபாத்திரத்தில் ரோஸா திரைப்பட கதாநாயகி மதுபாலா நடிக்க உள்ளார்.
ஜானகி அம்மா வேடத்திற்கு மதுபாலாவை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது, ஜெயலிதாவின் அம்மா கதாபர்திரத்தில் நடிக்கவே மதுபாலாவை அழைத்திருந்தோம். நேரில் பார்க்கும் போது அப்படியே ஜானகி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியதால் அவரை அந்த வேடத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததாக கூறியிருந்தார்.